×

ஜூனியர் ஐடிஎப் டென்னிஸ் தமிழக வீராங்கனை மாயா சாம்பியன்

புதுடெல்லி: ஐடிஎப் ஜூனியர் 300 டென்னிஸ் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாயா ராஜேஸ்வரன் சாம்பியன் பட்டம் வென்றார். டெல்லியில் ஐடிஎப் ஜூனியர் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த மாயா (15), ரஷ்ய வீராங்கனை ஏகடேரினா டுபிட்ஸ்யானாவுடன் இறுதிப் போட்டியில் மோதினார். முதல் சுற்றை, 3-6 என்ற புள்ளிக் கணக்கில் இழந்த மாயா, அடுத்த இரு செட்களை, 7-5, 6-2 என்ற கணக்கில் அபாரமாக ஆடி கைப்பற்றினார். இதையடுத்து இப்போட்டியில் வெற்றி பெற்ற மாயா, முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றார்.

The post ஜூனியர் ஐடிஎப் டென்னிஸ் தமிழக வீராங்கனை மாயா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : IDF ,Tennis ,Maya ,New Delhi ,Maya Rajeswaran ,Tamil Nadu ,IDF Junior 300 Tennis Singles Final ,Ekaterina Dubitsyana ,IDF Junior Tennis Semi-Final ,Delhi ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள்...