- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- பி.இ.கே.சேகர்பாபு
- சட்டசபை
- சென்னை
- Jayankondam
- கே. எஸ். கே. கன்னன்
- திமுக
- காசி விஸ்வநாதர்
- இளையூர் கிராமம்
- ஜெயன்கண்டம் சட்டமன்றம்
- ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம்
- அரியலூர் மாவட்டம்
- தமிழ்நாடு
சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன்(திமுக) பேசுகையில், ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம், இலையூர் கிராமத்தில் 500 ஆண்டுகளுக்குமேல் பழைமை வாய்ந்த காசி விஸ்வநாதர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில் அரியலூர் மாவட்டத்திலேயே மரகத லிங்கம் உள்ள ஒரே திருக்கோயில் ஆகும். இக்கோயிலை புனரமைத்து, குடமுழுக்கு நடத்தித் தர அமைச்சர் முன்வருவாரா? என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், “உறுப்பினர் கோரிய காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் மட்டும்தான் மரகத லிங்கம் இருப்பதாக கூறினார்.
இல்லை, சென்னையிலே தங்கசாலை தெருவில் இருக்கின்ற மலைக் கோட்டை ஆலயத்தில்கூட மரகத லிங்கம் இருக்கிறது. இவ்வாறு தமிழ்நாட்டில் 9 திருக்கோயில்களில் விலைமதிக்க முடியாத மரகத லிங்கம் அமைந்திருக்கிறது. அவர் கோரிய காசி விஸ்வநாதர் கோயில் திருப்பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. தொல்லியல் வல்லுநர் குழு, அதேபோல் எஸ்எல்சி ஆகிய கூட்டங்கள் நிறைவுபெற்று வரைபடத்தைச் சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறார்கள். முழுமையான வரைபடம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
The post தமிழ்நாட்டில் 9 திருக்கோயில்களில் விலைமதிக்க முடியாத மரகதலிங்கம்: சட்டப்பேரவையில் அமைச்சர் பி.ேக.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.
