×

பாஸ்டேக் பெறும் விதிகளில் இருந்த KYV நடைமுறை பிப்ரவரி 1 முதல் ரத்து செய்யப்படும்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு

பாஸ்டேக் பெறும் விதிகளில் இருந்த KYV நடைமுறை பிப்ரவரி 1 முதல் ரத்து செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. கார்கள், ஜீப்புகள், வேன்கள் உள்ளிட்ட இலரகு வாகனங்களுக்கான பாஸ்டேக் பெறும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாஸ்டேக் செயல்படுத்திய பிறகு KYV நடைமுறையால் ஏற்படும் தாமதம், சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய பாஸ்டேக் வழங்கும் முன்பு வங்கிகள் VAHAN தரவு தளத்தில் வாகனங்களின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைனில் வாங்கப்படும் பாஸ்டேக்களுக்கும் VAHAN தரவு தளத்தில் வாகன விவரங்களை சரிபார்க்க வேண்டும். புதிய நடைமுறை மூலம் பாஸ்டேக் பெறுவது மிக எளிமையாகவும் வசதியாகவும் இருக்கும் என NHAI தெரிவித்தது.

Tags : National Highways Authority of India ,KYV ,
× RELATED திண்டுக்கல் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் 10 பேர் காயம்..!!