×

கன்னியாகுமரி அருகே கேரள கழிவுகளுடன் 5 வாகனங்கள் பறிமுதல் 9 பேர் கைது

கன்னியாகுமரி: கேரள மாநிலத்தில் இருந்து கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை பிடிப்பதற்காக குமரி மாவட்ட எஸ்.பி.ஸ்டாலின் உத்தரவின்பேரில் நேற்றுமுன்தினம் இரவு அருமனை அருகே கேரள எல்லைப்பகுதியான பனிச்சமூடு யமுனா தியேட்டர் ஊரக சாலையில் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கேரள கழிவு ஏற்றி வந்த, 4 கன்டெய்னர் டெம்போ மற்றும் ஒரு மினி டெம்போ என 5 வாகனங்கள் அடுத்தடுத்து தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாகனங்களை ஓட்டி வந்த ஐயப்பன் (33), சைனு (24), கனகராஜ் (55), தினேஷ்குமார் (29), சாமுவேல் ஹமீது (63), ஷன்டோ (25), செருப்பலூர் பீஜி (29), திட்டுவிளை தர்சன் (23), அசாம் தவுரா (30) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

The post கன்னியாகுமரி அருகே கேரள கழிவுகளுடன் 5 வாகனங்கள் பறிமுதல் 9 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Kumari District ,S.P. Stalin ,Panichamudu ,Yamuna Theater ,Arumanai ,Kerala ,Dinakaran ,
× RELATED கேரளாவில் இருந்து காய்கறி கழிவுகள்...