×

முல்லைப்பெரியாறு அணை வழக்கு.. தேசிய அளவில் நிபுணர் குழுவை அமைக்காதது ஏன்?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!!

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கின் விசாரணையில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பில் தேசிய அளவில் நிபுணர் குழுவை அமைக்காதது ஏன்? என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அணை பாதுகாப்புச் சட்டத்தின்படி நிபுணர் குழுவை இதுவரை ஒன்றிய அரசு அமைக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். தேசிய அணை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் கட்டமைப்பு ரீதியான ஆய்வு கடைசியாக எப்போது மேற்கொள்ளப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தேசிய அணை பாதுகாப்பு தொடர்பான தேசிய குழு அமைப்பதில் எடுத்த நடவடிக்கை பற்றி விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமும், நிபுணர்கள் குழு விவகாரம் தொடர்பாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜனவரி 22ல் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post முல்லைப்பெரியாறு அணை வழக்கு.. தேசிய அளவில் நிபுணர் குழுவை அமைக்காதது ஏன்?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!! appeared first on Dinakaran.

Tags : Mullaperiyar ,Supreme Court ,Union Government ,Delhi ,Mullaperiyar Dam ,
× RELATED முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில்...