×

அனைத்து அரசு அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் வைக்கப்படும்: தேர்தல் துணை வட்டாட்சியர் தகவல்

திருத்தணி: திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வருவாய் கோட்டாட்சியர் தீபா நேற்று வெளியிட்டார். இந்த, வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பெற்றுக்கொண்டனர். இறுதி வாக்காளர் பட்டியலில், திருத்தணி தொகுதியில் 1,38,048 ஆண் வாக்காளர்கள், 1.42,626 பெண் வாக்காளர்கள், 32 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 706 பேர் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில், வட்டாட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். மேலும், 330 வாக்குச்சாவடி மையங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர்கள் பார்வைக்காக அனைத்து அரசு அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் வைக்கப்படும் என்று தேர்தல் துணை வட்டாட்சியர் மணிகண்டன் தெரிவித்தார்.

The post அனைத்து அரசு அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் வைக்கப்படும்: தேர்தல் துணை வட்டாட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirutani ,Revenue Divisional Officer ,Deepa ,Tirutani Revenue Divisional Officer ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் வடக்கு ஒன்றிய திமுக...