×

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக சரிதா

யோகி பாபு நடிப்பில் தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ படத்தை இயக்கியிருந்த மடோன் அஸ்வின், தற்போது தமிழில் ‘மாவீரன்’ என்ற படத்தையும், தெலுங்கில் ‘மாவீருடு’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் ஜோடியாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் யோகி பாபு, சரிதா, மிஷ்கின் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

வரும் ஜூலை 14ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், அன்னையர் தினத்தையொட்டி படக்குழு வெளியிட்ட போஸ்டரில் சரிதா, சிவகார்த்திகேயன் இடம்பெற்றிருந்தனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கினர். கதைப்படி சிவகார்த்திகேயன் அம்மா வேடத்தில் சரிதா நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

The post மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக சரிதா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : saritha ,sivakarthykeyan ,Madoon Aswin ,Yogi ,Adhiti Shankar ,Sivakarthikeyan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மருத்துவமனையில் செவிலியர் தற்கொலை