×

உசிலம்பட்டி அருகே தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி

உசிலம்பட்டி, ஜன. 6: உசிலம்பட்டி அருகே உள்ள வடுகப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு மூன்றாவதாக பிறந்த ஒரு வயது நிறைவடைந்திருந்த மகன் சிவமித்திரன் சம்பவத்தன்று வீட்டின் முன்பு மாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டிக்குள் எதிர்பாராத வகையில் தவறி விழுந்துள்ளார்.

அப்போது அந்த இடத்தில் குடும்பத்தினர் யாரும் இல்லை என்று தெரிகிறது. இதனால் தண்ணீரில் மூழ்கிய சிவமித்திரன் பரிதாபமாக பலியானார். இது குறித்து வந்த தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உசிலம்பட்டி அருகே தண்ணீரில் மூழ்கி குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Usilampatti ,Sivakumar ,Vadugapatti ,State Transport Corporation ,
× RELATED உசிலம்பட்டி அருகே குலைநோய்...