×

கொளக்காநத்தத்தில் 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார ஆய்வகம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறக்கிறார்

 

பாடாலூர், ஜன. 5: கொளக்காநத்தத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது சுகாதார ஆய்வகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைக்கிறார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார ஆய்வகம் மற்றும் அலுவலகம் (அலகு) கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (5ம் தேதி) காலை 9.30 மணியளவில் நடக்கிறது.

இதில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு வட்டார பொது சுகாதார அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த விழாவுக்கு ஆலத்தூர் ஒன்றிய குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகிக்கிறார். இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முன்னதாக கொளக்காநத்தம் வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு, சேர்மன் என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

 

The post கொளக்காநத்தத்தில் 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதார ஆய்வகம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian ,Public Health ,Laboratory ,Kolakanatam ,Patalur ,Public Health Laboratory ,Public Welfare Department ,Public Health Department… ,Dinakaran ,
× RELATED எச்.எம்.பி.வி வீரியமற்ற வைரஸ் மக்கள்...