×

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சி

 

பாடாலூர், ஜன. 7: பெரம்பலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஸ்கேட்டிங் பயிற்சி பெறுகின்றனர். இதில் 4 வயது முதல் 14 வயது வரை உள்ள மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். பெரம்பலூரில் துவங்கி, பாடாலூர் அருகே உள்ள ஆலத்தூர்கேட் வரை சுமார் 20 கிமீ தூரம் பயிற்சி நடக்கிறது. இதுபற்றி பயிற்சி பெறும் மாணவர்கள் கூறுகையில், ஏரிக்கரைகளில் விதைப்பந்து நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ஸ்கேட்டிங் பயிற்சி பெறுகிறோம். இதுவரை 7 வாரம் பயிற்சி பெற்றுள்ளோம். இன்னும் 8 முறை ஸ்கேட்டிங் செல்ல உள்ளோம். விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு இந்த பயிற்சி எங்களுக்கு விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுக்கிறது. பயிற்சி அளிக்கும் பயிற்சியாளருக்கு நன்றி என்றனர்.

 

The post பெரம்பலூர் அருகே பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Patalur ,Dinakaran ,
× RELATED சஞ்சீவிராயர் மலை கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா; திரளான பக்தர்கள் தரிசனம்!