சென்னை: பொங்கல் பண்டிகை வரும் ஜன.14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு வரிசையாக 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் ஜன.10ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் பலரும் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்தாண்டு அரசு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கும் என எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
இந்நிலையில் நாளை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
The post பொங்கல் சிறப்பு பேருந்துகள் அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.