கமுதி, ஜன. 4: கமுதி அருகே கீழராமநதியில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 266வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இளைஞர்கள் மற்றும் சிறுவர், சிறுமியரின் சிலம்பாட்ட அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கொடியேற்றுதல், பொங்கல் வைத்து வழிபடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் ஏராளமான இளைஞர்கள் மதுரை சென்று, அங்கு பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதே போல் பெரியஉடப்பங்குளம் கிராமத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
The post வீரபாண்டிய கட்டபொம்மன் 266வது பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.