×

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஞானசேகரன் மீது ஏற்கனவே குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றபோது ஞானசேகரனுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டிருந்தது. கை, கால் முறிவுக்கு ஸ்டான்லியில் சிகிச்சை எடுத்துக் கொண்டதை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் புழல் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Anna University ,Gnanasekaran ,Puzhal ,Chennai ,Kotturpuram… ,Dinakaran ,
× RELATED சிறையில் உள்ள ஞானசேகரனின் செல்போன்...