×

அறந்தாங்கி அருகே நாகுடி கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

அறந்தாங்கி,ஜன.3: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் அதிக வார்டுகளை கொண்ட நாகுடி கடை வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமைப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி கடை வீதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, மின்சார வாரியம், தனியார் மஹால் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த அலுவகங்களும் நூற்றுக்கணக்கான கடைகளும் உள்ளது.

இந்நிலையில் நாகுடி கடைவீதிக்கு நாள்தோறும் சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் பல்வேறு காரணங்களுக்கு நாகுடி கடைவீதிக்கு பொதுமக்கள் பைக்கு, கார்களில் வந்து செல்கின்றனர். அறந்தாங்கியில் இருந்து நாகுடி கடைவீதியாக செல்லும் பிரதான சாலை வழியாகதான் கிழக்கு கடல்கரை சாலைக்கு செல்லவேண்டி உள்ளது. இதனால் கடல் பகுதிக்கு செல்லும் மீன் வியாபாரிகளும் கிழக்கு கடல்கரை சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நபர்களும் நாகுடி வழியாக செல்லும் சாலையில் செல்கின்றனர். இப்படி போக்குவரத்திற்க்கு குறைவு இல்லாத சாலையில் அதிக அளவில் ஆக்கிரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

இதனால் நாகுடி கடைவீதியில் செல்லும் சாலை நாளுக்கு நாள் சாலை குறுகி கொண்டே செல்கிறது. இப்படி ஆக்கிரமைப்புகள் ஒருபக்கம் சாலையை குறுகலாக சூழலில் சாலையில் மாடுகளும் அவ்வப்போது படுத்து கொள்கிறது. இதனால் நாகுடி கடையில் விபத்து அதிக அளவில் நடந்து கொண்டு உள்ளது. இதனால் விபத்துகளை தவிற்கவும் பயம் இல்லாமல் பயணம் செய்யவும் நாகுடி கடைவீதியில் சாலையில் உள்ள அனைத்து ஆக்கிரமைப்புகளையும் அப்புறப்படுத்தி அனைவரும் பாதுகாப்பான பயணம் செய்ய சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகுடி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அறந்தாங்கி அருகே நாகுடி கடைவீதியில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Nagudi Kadayi Road ,Aranthangi ,Aranthangi Panchayat Union ,Pudukkottai district ,Dinakaran ,
× RELATED அறந்தாங்கி பகுதியில் இன்று மின்தடை