- Tadco
- மதுரை
- ஆதி திராவிடன்
- தமிழ்நாடு பொதுச் சேவை ஆணையம்
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்…
- தின மலர்
மதுரை, ஜன. 3:தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய போட்டித் தேர்விற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வில் (Prelimiary exam) தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வில் பங்கேற்க விரும்புவோருக்கு இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 21 முதல் 32 வயதிற்குள் இருப்பவர்கள் பங்கேற்கலாம். இவர்களுக்கு விடுதியில் தங்கியிருந்து படிக்க வசதி செய்து தரப்படும். மேலும், பயிற்சிக்கான செலவு தொகை முழுவதும் தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post தாட்கோ வாயிலாக குரூப் 2 தேர்விற்கு இலவச பயிற்சி appeared first on Dinakaran.