×

ஆன்லைனில் கேரள லாட்டரி விற்ற ஏட்டு உள்பட 3 பேர் கைது

மதுரை:மதுரை தல்லாகுளம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பீபீ குளத்தை சேர்ந்த பாலாஜி (52) என்றும், ஒரு கும்பலுடன் சேர்ந்து கேரள லாட்டரியை மதுரை உள்ளிட்ட தென்மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும் வாட்சப்பில் அனுப்பியும், ஆன்லைன் மூலமும் விற்பனை செய்ததும் தெரிந்தது.

தனக்கு உடந்தையாக புதூரை சேர்ந்த கனி (32), ரகுமத்துல்லா உள்ளிட்டோருடன், மதுரை 6வது சிறப்பு பட்டாலியனில் ஏட்டாக பணியாற்றிய பிரகாஷ் (38) என்பவரும் இருந்து வருவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார், கனி, ஏட்டு பிரகாஷ் ஆகியோரையும் நேற்று கைது செய்தனர்.

The post ஆன்லைனில் கேரள லாட்டரி விற்ற ஏட்டு உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Mundinam ,Thallakulam ,Balaji ,Bibi Pond ,Dinakaran ,
× RELATED பெண் நிர்வாகியுடன் உல்லாசம் தவெக...