சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். வழக்கு தொடுத்துள்ள சூர்யமூர்த்தி அதிமுக உறுப்பினரே அல்ல என்று தேர்தல் ஆணையத்தில் பழனிசாமி வாதம் தெரிவித்துள்ளார். அதிமுக உறுப்பினர் அல்லாத ஒருவர் கட்சி, சின்னம் தொடர்பாக வழக்கு தொடுக்க முகாந்திரம் இல்லை எனவும் எடப்பாடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக எம்ஜிஆர் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டவர் சூரியமூர்த்தி எனவும் பழனிசாமி வாதம் தெரிவித்துள்ளார்.
The post இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் appeared first on Dinakaran.