- உ.பி.
- அமைச்சர்
- லக்னோ
- ஆஷிஷ் சிங் படேல்
- தொழில்நுட்ப கல்வி
- யோகி ஆதித்யநாத்
- அப்னா தால் (எஸ்
- மத்திய அமைச்சர்
- அனுப்ரியா படேல்
- தின மலர்
லக்னோ: உபியில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் ஆஷிஷ் சிங் படேல். அப்னா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவரான இவர், ஒன்றிய அமைச்சர் அனுபிரியா படேலின் கணவர். இதற்கிடையே, தொழில்நுட்ப கல்வித் துறையில் விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக சமாஜ்வாடி, அப்னா தளம் (கே) கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், அமைச்சர் ஆஷிஷ் படேல் நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘‘இதுபோன்ற குற்றச்சாட்டுகளின் பின்னால் பெரிய சதி இருக்கிறது. சமூக நீதியின் குரலை நசுக்க முயற்சிக்கின்றனர். இது பற்றி விசாரிக்கும் சிறப்பு பிரிவு போலீசால் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனக்கு என்ன நடந்தாலும் அதற்கு சிறப்பு குழுவே காரணம்’’ என கூறி உள்ளார்.
The post பதவி உயர்வில் முறைகேடு புகார் போலீசால் எனது உயிருக்கு ஆபத்து: உபி அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.