×

கோவா கடற்கரையில் மனைவி சாக்‌ஷியுடன் தோனி உற்சாக நடனம்

கோவா: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, மனைவி சாக்‌ஷியுடன் கோவா கடற்கரையில் நடனமாடி புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினார். கோவாவின் மோர்ஜிம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மனைவி சாக்‌ஷி, மகள் ஜிவாவுடன் தோனி வந்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு மோர்ஜிம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமரிசையாக நடந்தன. அப்போது சீன லான்டர்ன் விளக்கை தோனி ஏற்றினார். பின் மனைவி மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக நடனமாடி புத்தாண்டை கொண்டாடினார். தோனி மனைவியுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டது.

The post கோவா கடற்கரையில் மனைவி சாக்‌ஷியுடன் தோனி உற்சாக நடனம் appeared first on Dinakaran.

Tags : Dhoni ,Sakshi ,Goa beach ,Goa ,Mahendra Singh Dhoni ,New Year ,Morjim beach ,Ziva ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு