×

தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை சார்பில் அரசு மானியத்தில் மின்ேமாட்டார் பம்பு செட்டுகள் வழங்கப்படுகிறது

தஞ்சாவூர், ஜன. 1: தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் அரசு மானியத்தில் மின் மோட்டார்கள் வழங்குதல் மற்றும் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. பழைய திறன் குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்கான நேரமும் அதிகரிக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டார்கள் வாங்கவும் புதிய விவசாய மின் இணைப்புகளுக்கு புதிய மின்மோட்டார்கள் வாங்கவும் மானியத்தில் மின்மோட்டார் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

நுண்ணீர் பாசனத் திட்டத்தில் மானியம்: நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க இயலும். மேலும், பின்னேற்பு மானியமாக மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.15,000 மானியமாக வழங்கப்படுகிறது.

கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள் 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.7,000 வரை மானியமாக தற்போது வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இத்திட்டங்களில் பயன்பெற தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மானோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்-613 004 என்ற முகவரியிலும், கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் திருப்பனந்தாள் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவிசெயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், தொழில் பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா. கும்பகோணம் 612 103 என்ற முகவரியிலும், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபவாசத்திரம் வட்டாரங்களை சார்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை 614 601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்கள்.

 மோட்டார் சைக்கிள், கார் ரேசில் ஈடுபடுவதை தடுக்கவும் புறவழிச்சாலைகளில் சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவினர் அனைத்து முக்கிய சாலைகளையும் கண்காணிப்பர். ஓட்டல்கள், லாட்ஜ்களில் அறை எடுத்து தங்குவோரின் விவரங்களை முழுமையாக சரியான முறையில் பெற வேண்டும் என்று அந்தந்த உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

The post தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை சார்பில் அரசு மானியத்தில் மின்ேமாட்டார் பம்பு செட்டுகள் வழங்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : MINEMATAR PUMP ,ENGINEERING DEPARTMENT OF THE GOVERNMENT OF TAMIL NADU ,Thanjavur ,Department of Agricultural Engineering of the Government of Tamil Nadu ,Minematar ,Agricultural Engineering Department of the Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பூதலூர் ஊராட்சியை பேரூராட்சியாக...