- திருவள்ளுவர்
- வெள்ளி
- பெரம்பலூர்
- மாவட்ட கலெக்டர்
- கிரேஸ் பச்சாவ்
- பெரம்பலூர் கலெக்டர்
- முக்கடல் சங்கம்
- கன்னியாகுமாரி
- வெள்ளி விழா
பெரம்பலூர், ஜன.1: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25-வது ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பீடத்துடன் 10-அடி உயரத்திற்குத் கெமிக்கல் கலவையால் தயாரிக்கப்பட்டு கொண்டு வந்து அமைக்கப் பட்டிருந்த திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மாவட்டக் கலெக் டர் கிரேஸ் பச்சாவ் நேற்று மலர்களைதூவி மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000ம் ஆண்டு நிறுவப்பட்டு, சிலையை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்தச் சிறப்பு வாய்ந்த சிலையின் 25வது ஆண்டு வெள்ளி விழாவினை முக்கடல் சூழும் குமரி முனையில் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, திருக்குறள் நெறி பரப்பும் 25 தகமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். கன்னியா குமரியில் 30ம் தேதி முதல் இன்று (ஜன-1 ஆம்தேதி) வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறு கிறது.
இந்த வெள்ளி விழா தொடர்பான நிகழ்வுகளை பொதுமக்களுக்கு நினை வூட்டும் விதமாக ஒவ் வொரு மாவட்டங்களிலும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாயிலாக திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ள ராட்சத பலூன் மற்றும் கன்னியா குமரியில் அமைக்கப் பட்டுள்ள 133 அடி உயர அய்யன் திருவள்ளுவரின் சிலை வடிவமைப்பைப் போன்ற மாதிரி திருவள்ளுவரின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெரம்ப லூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் காணும் வகையில் அமைக்கப்பட் டிருந்த திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா, மாவட்டவருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சப்.கலெக்டர் கோகுல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள இந்த சிலையை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு போட்டோ எடுத்துக் கொள்ளுகின்றனர்.
The post 25-வது ஆண்டு வெள்ளி விழா திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து கலெக்டர் மரியாதை appeared first on Dinakaran.