- மின்சார வாரிய கூட்டுக்குழு
- பெரம்பலூர் 4வது ரோடு
- பெரம்பலூர்
- தமிழ்நாடு மின்சார வாரிய கூட்டுக்குழு
- உத்தரப் பிரதேசம்,
- சண்டிகர்
- தமிழ்நாடு…
- தின மலர்
பெரம்பலூர்,ஜன.1: உத்திர பிரதேசம் சண்டிகர் மாநிலங்களில் மின் விநியோகம் தனியார் மய மாவதை கைவிடக் கோரி தமிழ்நாடு மின்வாரிய கூட்டுக்குழு சார்பாக பணி புறக்கணிப்பு மற்றும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் 4ரோடு அருகேயுள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் வாரிய கூட்டுக்குழு சார் பாக உ.பி மற்றும் சண்டிகர் மாநிலங்களில் மின் விநி யோகம் தனியார் மயப் படுத்துவதை கைவிடக் கோரி நேற்று (31ம்தேதி) பகல் 12 மணி முதல் 1 மணிவரை வேலை புறக் கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்வாரிய கூட்டுக்குழு சார்பாக பெரம் பலூர் 4ரோடு அருகேயுள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மண்டல செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். தமிழ் நாடு மின்வாரிய பொறி யாளர் சங்கத்தின் வட்டச் செயலாளர் ருத்ராபதி, தமிழ்நாடு மின்வாரிய ஒர்க்கர்ஸ் ஃபெடரேஷன் சார்பாக கனி மற்றும் சித்ரா,உமா மகேஸ்வரி, கர்ணன், கனிமொழி, காயத்ரி, அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண் டனர்.
The post பெரம்பலூர் 4ரோடு அருகே மின்வாரிய கூட்டுக்குழு பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.