×

சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

 

திண்டுக்கல், டிச. 31: குஜிலியம்பாறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (43). கூலித்தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்து, பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதையறிந்த வடமதுரை அனைத்து மகளிர் போலீசார், ரங்கசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, திண்டுக்கல் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி வாதாடினார். விசாரணை முடிவில்., ரங்கசாமி மீதான குற்றச்சாட்டுகள் உரிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் உதவியுடன் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : POCSO ,Dindigul ,Dindigul POCSO special court ,Kujiliyambarai ,Rangasamy ,POCSO court ,Dinakaran ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்...