×

கொம்மடிக்கோட்டை கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டி

சாத்தான்குளம், டிச. 31: சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டை சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு சுவர் இதழ் தயாரிப்பு போட்டி நடந்தது. போட்டியில் 24 மாணவர்கள் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் துறை பேராசிரியை முத்துபிரியா, நடுவராக செயல்பட்டு முதல் 3 இடங்களுக்கான மாணவர்களை தேர்வு செய்தார். தேர்வான மாணவர்களுக்கு தேர்தல் துணை தாசில்தார் கோமதிசங்கர் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி துணை முதல்வர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அசோக்லிங்கம் தொகுத்து வழங்கி நன்றி கூறினார். விழாவில் கொம்மடிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி, வருவாய் ஆய்வாளர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கொம்மடிக்கோட்டை கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டி appeared first on Dinakaran.

Tags : Voter Awareness Competition ,Kommadikottai College ,Sathankulam ,National Welfare Project ,Kommadikottai ,Bhagavathy Arts and Science College ,Dinakaran ,
× RELATED மீரான்குளத்தில் சுகாதார பணிகள் பூச்சியியில் வல்லுநர் ஆய்வு