×

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரண மாத்திரை விற்பனை

அம்பத்தூர்: கோயம்பேடு மார்க்கெட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் மூட்டை தூக்கும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது உடல்வலியை போக்க, மார்க்கெட் அருகே உள்ள மெடிக்கல்களில் வலி நிவாரண மாத்திரைகளை, டாக்டர்களின் பரிந்துரையின்றி ரூ.20 முதல் ரூ.30 வரை பணம் கொடுத்து வாங்கி சாப்பிடுகின்றனர். இவற்றை சாப்பிட்டவுடன் புத்துணர்ச்சி கிடப்பதாக கூறப்படுவதால், கூலி தொழிலாளர்கள் அவற்றை அடிக்கடி வாங்கி சாப்பிடுகின்றனர்.

இதனை பயன்படுத்தி மெடிக்கல் கடைக்காரர்கள், வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த மாத்திரைகளை தினமும் உட்கொள்வதால் நாளடைவில் பக்கவிளைவு ஏற்பட வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து சமூகநல ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள மெடிக்கல் கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கூலி தொழிலாளர்களுக்கு ரூ.30க்கு வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்கின்றனர்.

இதுபோன்ற மெடிக்கல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். மருத்துவர்கள் கூறுகையில், ‘‘மருத்துவரின் அனுமதி இல்லாமல் மெடிக்கலில் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது. மருத்துவரின் சீட்டு இல்லாமலும் மாத்திரைகளை விற்பனை செய்யவே கூடாது. கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலி தொழிலாளர்கள், வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவ சீட்டு இல்லாமல் வாங்கி உபயோகப்படுத்திவருவதாக கேள்விப்பட்டோம். அந்த மாத்திரைகளை உட்கொண்டால் கண்டிப்பாக உடல்நிலை பாதிக்கப்படும்,’’ என்றனர்.

The post மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரண மாத்திரை விற்பனை appeared first on Dinakaran.

Tags : Coimbed Market ,Dinakaran ,
× RELATED முருங்கைக்காய் தக்காளி விலை மீண்டும் குறைந்தது