சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் மீண்டும் தக்காளி, முருங்கைக்காய் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.50லிருந்து ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் நேற்று காலை வரத்து அதிகரிப்பால் 40 வாகனங்களில் இருந்து 1000 டன் தக்காளிகள் வந்து குவிந்ததால் ஒரு கிலோ தக்காளி ரூ.30லிருந்து ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் மகாராஷ்டிரா, ஆந்திரா மாநிலத்தில் இருந்து வரும் முருங்கைக்காயின் வரத்து அதிகரிப்பால் முருங்கைக்காயின் விலை மீண்டும் குறைந்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.400லிருந்து ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post முருங்கைக்காய் தக்காளி விலை மீண்டும் குறைந்தது appeared first on Dinakaran.