- அமைச்சர்
- சடால்
- அண்ணாமலை
- ஸ்ரீபிரகாமுத்தூர்
- துணை தலைவர்
- உதயநிதி ஸ்டால்
- ஸ்ரீபரமுத்தூர் ஒன்றியம்
- குன்னம் கிராமம்
- ஸ்ரீபிரஹுமுதூர்
- தென்னிந்திய ஒன்றியம்
- சாட்டா
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், குண்ணம் கிராமத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. விழாவிற்கு ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கோபால் தலைமை வகித்தார். இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ராமமூர்த்தி வரவேற்றார்.
ஒன்றியக்குழு தலைவர் கருணாநிதி, மாவட்ட நிர்வாகிகள் முருகன், ஜார்ஜ், ரவி, பொதுக்குழு உறுப்பினர் கணேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: லண்டன் சென்று படித்து வந்த ஒருவர் அண்மையில் தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். எங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் எருமை மாட்டு தோலை வாங்கி அடித்திருப்போம்.
அவர் பஞ்சு, தென்னை நார் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட சாட்டையால் அடித்துக்கொண்டது அவருக்கு உரைக்காது. சீமான் போன்ற ஆட்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் வருவார்கள், பின்னர் ஆள் இல்லாமல் போய்விடுவார்கள். விஜய் கட்சி ஆரம்பித்தவுடன், நாம் தமிழர் கட்சியில் மாவட்ட மாவட்டமாக கட்சியை கலைத்துவிட்டு, திமுகவிலும், தமிழக வெற்றி கழகத்திலும் இணைந்து வருவதால் சீமான் நடுரோட்டில் விடப்பட்டுள்ளார். அதேபோல் சின்ன மாங்கா, பெரிய மாங்கா கதை உங்களுக்கு தெரியும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பஞ்சு சாட்டையால் அடித்தால் வலிக்காது எங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் எருமை மாட்டு தோலால் அடித்திருப்போம்: அண்ணாமலை மீது அமைச்சர் சாடல் appeared first on Dinakaran.
