- அமைச்சர்
- கயல்விழி செல்வராஜ்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மனித வள மேலாண்மை
- என் கயல்விச்சிசெல்வராஜ்
- பரங்கிமலை இரயில் நிலையம்
- சதீஷ்
- சத்யபிரியா
- தின மலர்
சென்னை: தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை: கடந்த 2022ம் ஆண்டு அக்.13ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில், சத்தியப்பிரியா என்ற கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளி சதீஸ்க்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று (நேற்று) தீர்ப்பு வழங்கி உள்ளது. 2022ம் ஆண்டு அக்டோபரில் இந்த குற்றச்சம்பவம் நடந்த உடனே விரைவாக குற்றவாளி சதீஸ் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டான். மேலும் முதல்வரின் உத்தரவுப்படி துரிதமாக விசாரணையை மேற்கொண்ட தமிழ்நாட்டின் சிபிசிஐடி போலீசார் 70 சாட்சிகளை வழக்கில் இணைத்து குற்றவாளிக்கு எதிரான ஆதரங்களையும் உரிய வகையில் திரட்டி நீதிமன்றத்தின் முன் குற்றவாளியை நிறுத்தினர்.
சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகள் மற்றும் இதர விசாரணைகள் விரைந்து முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் நடந்து 25 மாதங்களுக்குள் வழக்கு விசாரணை முடித்து தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளது. கொலைக்குற்ற வழக்கில் இவ்வளவு விரைவாக நீதி பெற்றுக்கொடுத்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு. சிபிஐ விசாரணையில் இருக்கும் 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில், இன்னும் எந்த ஒரு முடிவும் தெரியாத சூழலில், 2022ம் ஆண்டு நடந்த கொலை குற்றத்திற்கு இரண்டே ஆண்டில் தண்டனை கிடைக்கும் வண்ணம் செயல்பட்டுள்ளது திராவிட மாடல் அரசு. திராவிட மாடல் ஆட்சியில் நீதி வழுவாது. நீதி தாமதம் ஆகாது.
The post 2022ல் நடந்த கொலைக்கு 2 ஆண்டில் தண்டனை திராவிட மாடல் ஆட்சியில் நீதி வழுவாது, நீதி தாமதம் ஆகாது: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிக்கை appeared first on Dinakaran.