×

சென்னையில் அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததாக த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கைது

சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். . சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 24ம்தேதி இரவு காதலனுடன் இருந்த மாணவி பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டார். இதுகுறித்து புகார் அளித்த 24 மணி நேரத்தில் சென்னை பெருநகர போலீசார் விசாரித்து குற்றவாளி கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் (37) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஐபிசி சட்டப்பிரிவில் இருந்து பிஎன்எஸ் சட்டப்பிரிவால் ஏற்பட்ட தொழில்நுட்ப தாமதத்தை பயன்படுத்தி எப்ஐஆர் பதிவிறக்கம் செய்தது தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் தனியாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இன்று கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அந்த கடிதத்தை நகல் எடுத்து தவெக கட்சியினர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனா்.

சென்னை பூக்கடை பகுதியில் தனியார் கல்லூரியில் விஜய் எழுதிய கடிதத்தை விநியோகித்து வந்த போது அனுமதியின்றி இதுபோல் செயல்பட்டதாக கூறி தவெகவினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனா். இதனை அடுத்து சென்னை தி.நகரில் என்.ஆனந்த் இந்த கடிதங்களை தவெகவினர் வழங்கியதை பார்க்க சென்ற போது போலீசரால் கைது செய்யப்பட்டுள்ளார். முதலில் அனுமதியின்றி கடித நகலை வழங்க கூடாது என்றும், கலைந்து செல்லும்படியும் போலீசார் கூறியுள்ளனர்.

ஆனால் தொடர்ந்து கட்சியினர் அதனை வழங்கிய நிலையில் என்.ஆனந்த் உட்பட 30க்கும் மேற்பட்ட கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post சென்னையில் அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததாக த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Secretary General ,N. Anand ,Vijay Tamil Nadu Victory Club ,ANNA UNIVERSITY CAMPUS ,Dinakaran ,
× RELATED மகிழ்ச்சி பொங்கிட, உவகைப் பெருக்குடன்...