×

தங்கைகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்: புதுமைப்பெண் திட்ட வெற்றி-சேர்க்கை விகிதமே சாட்சி: துணை முதல்வர் உதயநிதி!!

சென்னை: புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மூலம், பயன்பெறும் தங்கைகளுக்கு என் அன்பும், வாழ்த்தும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி தனது எக்ஸ் தளத்தில் கூறிய வாழ்த்து செய்தியில்;

அரசுப்பள்ளிகள் மட்டுமன்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவியரும், மாதம் ரூ.1000 உதவித்தொகை பெறுகிற வகையில், புதுமைப்பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்கள்.

ஏற்கனவே, மாதந்தோறும் 2.98 லட்சம் மாணவியர் இத்திட்டத்தால் பயன்பெற்று வரும் நிலையில், இனி கூடுதலாக 75 ஆயிரம் மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறவுள்ளனர்.

புதுமைப்பெண் திட்டத்தின் வெற்றிக்கு தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை விகிதமே சாட்சி.

சமூகத்தில் சரி பாதி இருக்கும் பெண்களின் கல்விக்கு நம் திராவிட மாடல் அரசு என்றும் துணை நிற்கும்.

புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கம் மூலம், பயன்பெறுகின்ற அத்தனை தங்கைகளுக்கும் என் அன்பும், வாழ்த்தும்!. இவ்வாறு துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post தங்கைகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்: புதுமைப்பெண் திட்ட வெற்றி-சேர்க்கை விகிதமே சாட்சி: துணை முதல்வர் உதயநிதி!! appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi ,Chennai ,Udhayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED தேசிய அளவிலான வாள் வீச்சுப் போட்டி:...