×

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை.. 2 நாட்களுக்கு பனிமூட்டம்: வானிலை ஆய்வு மையம் தகவல்!!

சென்னை: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். நாளை தென் மற்றும் வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு அதிகாலையில் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்றும் நாளையும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
20-12-2024 முதல் 03-01-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:
30-12-2024: தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

31-12-2024: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

01-01-2025: இலங்கை கடலோரப் பகுதிகளை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

02-01-2025 மற்றும் 03-01-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்:
30-12-2024 மற்றும் 31-12-2024: எச்சரிக்கை ஏதுமில்லை.

01-01-2025: குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

02-01-2025: மாலத்தீவு பகுதிகள் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு க்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

03-01-2025: தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

The post தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை.. 2 நாட்களுக்கு பனிமூட்டம்: வானிலை ஆய்வு மையம் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Chennai Meteorological Department ,Ramanathapuram ,Thoothukudi ,Nellai ,Kumari ,south ,north Tamil Nadu ,
× RELATED கிழக்கு திசை காற்று வேகமாறுபாடு; தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு