×

மகன்களை கவனிக்க யாரும் இல்லாததால் விரக்தி தந்தை தீக்குளித்து தற்கொலை

நெல்லை : தென்காசி மாவட்டம் சிவகிரி பிள்ளைகளை கவனிக்க ஆள் இல்லை என்ற வருத்தத்தில் தந்தை தீக்குளித்த தற்கொலை செய்து கொண்டார். சிவகிரி சிவராமலிங்கபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் ராமர் (48). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சக்தி ஈஸ்வரி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து ராமர் அவரது மகன்கள் சுப்பிரமணி (11). குமரேசன் (10) ஆகியோர் ராமர் அம்மா பண்டாரத்தி அம்மாளுடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் வேலைக்கு ஒழுங்காக செல்ல முடியவில்லை. இதற்கிடையே ராமரின் தாயாருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் தனது மகளின் வீட்டிற்கு சென்று விட்டாார். இதனால் ராமர் தனது பிள்ளைகளை கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மன வேதனையடைந்த ராமர் நேற்று வீட்டின் அருகே வைத்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் அவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முகலெட்சுமி, எஸ்ஐ வரதராஜன் ஆகியோர் ராமரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். டிஎஸ்பி வெங்கடேசன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தனது மகன்களை கவனிக்க யாரும் இல்லாததால் விரக்தியில் தந்தை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post மகன்களை கவனிக்க யாரும் இல்லாததால் விரக்தி தந்தை தீக்குளித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Sivagiri, Tenkasi district ,Subbaiah ,Ram ,Sivaramalingapuram Nadutheru, Sivagiri ,Sakthi Eswari.… ,
× RELATED ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கத்தியால் குத்திக்கொலை