×

கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது

கோவை: கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 18 டன் சமையல் கேஸ் உடன் டேங்கர் லாரி கோவை எப்.சி.ஐ. குடோன் ரோட்டில் உள்ள பாரத் கேஸ் சிலிண்டர் நிறுவனத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று அவினாசி மேம்பாலத்தில் ஏறியபோது டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டேங்கரில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு டேங்கரில் இருந்து கேஸ் கசிவதை ஊழியர்கள் தடுத்தனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் விபத்து நிகழ்ந்த மேம்பாலத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மேலும் விபத்து நடந்த இடத்தை சுற்றி 1 கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள பகுதியில் இருந்த 35 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கோவை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் லாரி டிரைவரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது appeared first on Dinakaran.

Tags : Radhakrishnan ,Gowai Gas ,KOWAI ,TANKER LORRY CO ,KERALA STATE KOCHI C. I. ,Avinasi ,Bharat Gas Cylinder Company ,Kudon Road ,Koi Case Tanker Truck Accident ,Dinakaran ,
× RELATED கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது