×

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மக்களுக்கு அன்னதானம் வழங்கல்

விருதுநகர், டிச.30: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு ஏஆர்ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ அன்னதானம் வழங்கினார். தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் லட்சுமி நகரில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் ஏஆர்ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மதியழகன் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திமுக ஒன்றிய பொருளாளர் ரவிக்குமார், மாவட்ட பிரதிநிதி மாடசாமி மற்றும் லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், என்ஜிஓ காலனி கிளைக் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மக்களுக்கு அன்னதானம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi Stalin ,Virudhunagar ,Deputy Chief Minister ,DMK MLA ,ARR Srinivasan ,Tamil Nadu ,DMK ,Youth Wing Secretary ,Lakshmi… ,
× RELATED தங்கைகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்:...