×

திறன் மேம்பாட்டு பயிற்சி

 

சிவகங்கை, டிச.30: சிவகங்கை அருகே ஒக்கப்பட்டி கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பில், உப்பாறு உப வடிநிலப்பகுதி திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குநர் மதுரைச்சாமி தலைமை வகித்தார். உதவி இயக்குநர் வளர்மதி, வேளாண்மைத்துறை திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார்.

விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத் துறை உதவி இயக்குநர் சக்தி கணேஷ் விதைப்பண்ணை அமைக்கும் முறைகள் பற்றி கூறினார். இப்பயிற்சியினை உதவி வேளாண்மை அலுவலர் பாண்டீஸ்வரன், அட்மா திட்ட தொழில்நுட்ப அலுவலர்கள் தம்பிதுரை, ராஜா ஏற்பாடு செய்தனர்.

The post திறன் மேம்பாட்டு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Agriculture Department ,Okpatti ,Deputy Director ,Agriculture ,Maduraisamy ,Assistant Director ,Valarmathi ,Agriculture Department… ,Dinakaran ,
× RELATED விவசாயிகள் இணை தொழிலாக மீன் வளர்த்து வருமானம் ஈட்டலாம்