திருமங்கலம், டிச. 30: பராமரிப்பு பணிகள் காரணமாக திருமங்கலம் ரயில்வே கேட் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவ ரையில் மூடப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனையொட்டி ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த கேட்டினை தாண்டி காமராஜபுரம், கற்பகம்நகர், சோனைமீனாநகர், கலைநகர், சுங்குராம்பட்டி, விடத்தகுளம், ஒ.ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளன. தற்போது ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதியில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மேம்பால பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக திருமங்கலம் ரயில்வே ஸ்டேசனையொட்டி அமைந்துள்ள ரயில்வே கேட் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையில் மூடப்பட்டிருக்கும் என தென்னகரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேனர் ரயில்வே கேட்டின் இருபுறமும் கட்டப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக கேட் மூடப்பட்டிருப்பதால் காமராஜபுரம், கற்பகநகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மாற்றுபாதையான பாண்டியன்நகர் ரயில்வே கேட் வழியாக செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
The post பராமரிப்பு பணிகள் காரணமாக திருமங்கலம் ரயில்வே கேட் இன்று மூடல்: மாற்றுபாதையை பயன்படுத்த அறிவுறுத்தல் appeared first on Dinakaran.