குலசேகரம், டிச.30: குலசேகரம் அருகே செருப்பாலூர் பண்டாரவிளை சானல்கரை பகுதியை சேர்ந்தவர் சசி (48). கூலித்தொழிலாளி. அவரது மனைவி கவிதா (40). இவர் முந்திரி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கவிதா குழுவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த சசி ஏன் கடன் வாங்கினாய்? என கேட்டதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற கவிதா பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சசி குலசேகரம் காவல் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மாயமான கவிதாவை தேடி வருகின்றனர்.
The post குலசேகரம் அருகே இரண்டு குழந்தைகளின் தாய் திடீர் மாயம் appeared first on Dinakaran.
