×

பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்

 

திருத்துறைப்பூண்டி, டிச. 28: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருத்துறைப்பூண்டி வட்டக் கிளையில் மாநில மாநாட்டின் போரா ட்ட அறைகூவல் தீர்மானங்கள் குறித்து ஆர்ப்பாட்டம் தாலுக்கா அலுவலகம் முன்பு நடைபெற்றது. வட்டத் தலைவர் முருகானந்தம், வட்ட செயலாளர் கோபி கோபி சரவணன், வட்ட பொருளாளர் சதீஷ் கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், முதலமை ச்சர் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டே அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள் ளிட்ட 9 அம்ச கோரி க்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

The post பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Thiruthurapundi ,Tamil Nadu Civil Servants Association ,Taluka Office ,Bora Tua Ta Government ,Thiruthurapundi District ,
× RELATED நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்