×

பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

காரிமங்கலம், டிச.28: காரிமங்கலம் அடுத்த அடிலம் ஊராட்சி சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பார்த்திபன். இவரது மகன் அசோக்(24). இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், தர்மபுரி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று காலை பணிக்கு செல்வதற்காக, அசோக் தனது டூவீலரில், தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். மாட்லாம்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது, சர்வீஸ் ரோட்டில் இருந்து வேகமாக வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது. இதில் அசோக் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் எஸ்ஐ சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், அசோக் உடலை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

The post பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Parthiban ,Chennampatti ,Adilam panchayat ,Ashok ,Dharmapuri ,
× RELATED காரிமங்கலத்தில் பூக்கள் விலை உயர்வு