×

உதகையில் 150 ஏக்கர் பரப்பளவில் காணாமல் போன ஏரியை கண்டுபிடித்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

உதகை: உதகை அருகே ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட சுமார் 150 ஏக்கர் பரப்பளவிலான ஏரியை காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உதகை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆங்கிலேயர் காலத்தில் தலையாட்டுமந்து பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பர்ன் புட் ஏரி உருவாக்கப்பட்டது. இந்த ஏரியை முறையாக தூர் வாராததால் நாளடைவில் அதன் பரப்பளவு சுருங்கி ஏரி இருந்ததற்கான அடையாளமே இன்றி காணப்படுகிறது. இந்த நிலையில் பர்ன் புட் ஏரியை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும், கிணறுகள் அமைத்து தண்ணீர் விற்பனை செய்து வருவதாகவும் தமிழக பண்பாட்டு மக்கள் தொடர்பகம் என்ற அமைப்பின் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி ஏரியை மீட்க மாவட்ட ஆட்சி தலைவர் நடவடிக்கை வேண்டும் என்று கூறி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஏரியை மீட்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனிடையில் பர்ன் புட் ஏரி வறண்டதால் அந்த இடத்தை விவசாய நிலமாக பயன்படுத்த 50 ஆண்டுகளுக்கு முன்பே மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை விவசாய நிலமாக விவசாயிகள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.         …

The post உதகையில் 150 ஏக்கர் பரப்பளவில் காணாமல் போன ஏரியை கண்டுபிடித்து தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : District Collector's Office of Tharakori ,Utkai ,Utagai ,district collector's ,Tharakori ,Dinakaran ,
× RELATED தண்டவாளத்தில் மண்சரிவு: உதகை மலை ரயில் சேவை நிறுத்தம்