×

கொடைக்கானலில் பனி பாதிப்பில் இருந்து பாதுகாக்க மலர் நாற்றுகளுக்கு பசுமைப் போர்வை


கொடைக்கானல்: கொடைக்கானலில் பனிப் பாதிப்பில் இருந்து பாதுகாக்க, மலர் நாற்றுகளுக்கு இரவு நேரங்களில் பசுமைப் போர்வை போர்த்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மழை சீசன் முடிந்து உறைபனி சீசன் தொடங்கியுள்ளது. இந்த சீசன் தாமதமாக தொடங்கினாலும், அதன் தாக்கம் அதிகமாக உணரப்படுகிறது. குறிப்பாக பருவமழையால் நிரம்பியுள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, புல்வெளி, கீழ்பூமி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உறைபனி அதிகமாக பொழிந்து, வெண்ணிற கம்பளம் விரித்தது போல காணப்படுகிறது. பிரையன்ட் பூங்காவில் சீசன் காலங்களில் பூக்கும் வகையில் பல லட்சம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. இவைகள் உறைபனியால் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்த மலர் நாற்றுகள் மற்றும் தற்போது உள்ள மலர்ச்செடிகள் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில், பிரையண்ட் பூங்காவில் பசுமைப் போர்வை அமைக்கப்பட்டு, மாலை வேளைகளில் இந்த மலர் நாற்றுக்களை மூடும் பணி நடைபெற்று வருகிறது. மறுநாள் காலையில் இந்த பசுமை போர்வைகள் நீக்கப்பட்டு விடும். இந்த பனி சீசன் காலத்தில் மட்டும் இதுபோன்ற நடவடிக்கைகளை பூங்கா ஊழியர்கள் செய்து வருகின்றனர் என பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்துள்ளார்.

The post கொடைக்கானலில் பனி பாதிப்பில் இருந்து பாதுகாக்க மலர் நாற்றுகளுக்கு பசுமைப் போர்வை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Kodaikanal, Dindigul district ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்...