- ருத்ரக்ஷம்
- குன்னூர் சிம்ஸ் பார்க்
- Kunnur
- நீலகிரி மாவட்டம்
- இமயமலை, நேபாளம்
- சிம்ஸ் பார்க்
- குன்னர் சிம்ஸ் பார்க்
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மூலிகை மற்றும் பல்வேறு தாவரங்கள் மட்டுமில்லாமல், அரிய வகை பழங்கால மரங்களும் அதிகளவில் உள்ளது. இமயமலை, நேபாளம் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே அதிகம் உள்ள ருத்ராட்ச மரங்கள் சிம்ஸ் பூங்காவில் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நடவு செய்யப்பட்டது. தற்போது வரை இந்த மரங்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது ருத்ராட்சை மரத்தில் காய்கள் காய்த்துள்ளது. ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சை காய்கள் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால், இதற்கு கிராக்கி அதிகமாக உள்ளது.
சிம்ஸ் பூங்காவில் 5 முகம் கொண்ட 2 ருத்ராட்சை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஒரு மரம் 1905ம் ஆண்டு நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்டு நடவு செய்யப்பட்டது. மற்றொரு மரம் 1945ம் ஆண்டு நடவு செய்யப்பட்டது. ருத்ராட்சை மரத்தில் ஆகஸ்ட்டில் பூக்கள் பூத்து செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் காய் பிடித்து டிசம்பர் கடைசி வாரத்தில் இந்த காய்கள் பழமாகும். ருத்ராட்சை சீசன் தற்போதே தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்காவை ஆர்வமுடன் பார்வையிட்டு, கீழே உதிரும் ருத்ராட்சை கொட்டைகளை எடுத்து செல்கின்றனர்.
The post குன்னூர் சிம்ஸ் பூங்காவில் காய்த்து குலுங்கும் ருத்ராட்சம் appeared first on Dinakaran.