×

கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி 3 (ஆங்கிலம்) – திரை விமர்சனம்

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்திருக்கிறது இந்தப் படம். இயக்குனர் ஜேம்ஸ் கன்னின் நேர்த்தியான திரைக்கதை, உயிரோட்டமான வசனங்களால் படத்தை மார்வெல்லுக்கு கம்பேக் படமாக தந்துள்ளார். முதல் இரு பாகங்களிலும் வெவ்வேறு வில்லன்களை சமாளித்து வெற்றி கண்ட கார்டியன்கள் இந்த பாகத்தில் புதிய வில்லன் ஆடம் வார்லாக்கை எதிர்த்து போராடுகிறார்கள். வான்வெளியில் உள்ள ேநாவேர் என்ற இடத்தில் இருக்கும் கார்டியன்களை தாக்கி ராக்ெகட் ரக்கூனை கடத்த முயற்சிக்கிறான் ஆடம் வார்லாக்.

எதிர்தாக்குதல் நடத்துகிறார்கள் கார்டியன்கள். இதில் ராக்கெட் ரக்கூன் படுகாயமடைகிறார். வில்லன் காயங்களுடன் தப்பி ஓடுகிறான். கார்டியன்கள் இணைந்து ராக்கெட் ரக்கூனை காப்பாற்றினார்களா? ஆடம் லார்க் ஏன் ராக்கெட் ரக்கூனை கடத்த முயற்சிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. முதல் இரண்டு பாகத்திலேயே எல்லா கேரக்டர்களும் ரசிகர்களுக்கு அறிமுகம் என்பதால், இந்த பாகத்தில் நேரடியாக கதை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆக்‌ஷன், சேசிங், வண்ணமயமான அரங்குகள் இவற்றோடு அடிக்கடி சிரிக்கவும் வைக்கிறது, அடிக்கடி அழவும் வைக்கிறது படம்.

காரணம் முந்தைய பாகங்களை விட இதில் அதிகமான சென்டிமென்ட் காட்சிகள் இருக்கிறது. குறிப்பாக இடைவேளைக்கு சற்று முன்வரும் காட்சி எல்லோரையும் கலங்க வைத்து விடும். கூடுதல் சிறப்பாக இந்த படத்தில் 80களில் வெளியாகி வெற்றி பெற்ற பாப் பாடல்களை உரிய இடத்தில் சேர்த்து சுவாரஸ்யமூட்டுகிறார்கள். என்றாலும் வில்லனை தேடிச் செல்லும் கார்டியன்கள் பயணம் சிலநேரம் சலிப்படையவும் வைக்கும். கோடை விடுமுறையை குழந்தைகளுடன் கொண்டாடக்கூடிய படமாக இது அமைந்திருக்கிறது. கார்டியன்களின் கடைசி படம் இது என்று ஏற்கெனவே அறிவித்து விட்டார்கள். இனி கார்டியன்கள் தனித்தனி கேரக்டர்களாக வேறு படங்களில் வரலாம். இணைந்து வர வாய்ப்பில்லை.

The post கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி 3 (ஆங்கிலம்) – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Marvel ,James Gunn ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்