- தமிழ் அலுவல் மொழி வார விழிப்புணர்வு பேரணி
- திருவாரூர்
- கலெக்டர்
- சாரு
- தமிழ் அலுவல் மொழி வாரம்
- தமிழ் அபிவிருத்தி திணைக்களம்
- தின மலர்
திருவாரூர், டிச, 27: திருவாரூரில் தமிழ் ஆட்சிமொழி வாரத்தினையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சாரு துவக்கிவைத்தார். தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளை நினைவு கூறும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் பழைய ரயில் நிலையத்திலிருந்து கலெக்டர் துவக்கிவைத்தார்.நிகழ்ச்சியில் கலெக்டர் சாரு பேசுகையில், திருவாரூ மாவட்டத்தில் கடந்த 18ந் தேதி முதல் இன்று வரை ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் ஆட்சி மொழி சட்ட வாரத்திற்கான ஒட்டுவில்லைகள் ஒட்டியும் துண்டறிக்கை மற்றும் அரசாணை வழங்கியும் கொண்டாடப்படுகிறது. மேலும் அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழி சட்டம் வரலாறு குறித்தும், பிழையின்றி தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுதல் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விழிப்புணர்வு பேரணியானது துவங்கி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
தமிழ் ஆட்சிமொழி வார பேரணி மார்கெட் தெரு மற்றும் தஞ்சை சாலை வழியாக புதிய ரயில் நிலையத்தை அடைந்து முடிவுற்றது. இதில் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குனர் சீதாலெட்சுமி, கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post தமிழ் ஆட்சிமொழி வார விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.