ஒட்டன்சத்திரம், டிச. 27: ஒட்டன்சத்திரம் ஒன்றித்திற்குட்பட்ட ஐ.வாடிப்பட்டி, அம்பிளிக்கை, மண்டவாடி, எல்லப்பட்டி, வெங்கட்டாபுரம், சின்னக்காம்பட்டி, மார்க்கம்பட்டி, நல்லுப்பட்டி, சி.க.வலசு, பூலாம்பட்டி, சக்கம்பட்டி, ஒடைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அங்கன்வாடி மையம், நியாய விலை கடை, பேருந்து நிறுத்தம், சிறுபாலம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ஊராட்சி மன்ற கட்டிட அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி இவற்றை திறந்து வைத்தும், சாலை தரம் உயர்த்தும் பணிக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட இயக்குனர் திலகவதி, திமுக ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜன், பாலு, ஒன்றிய தலைவர் அய்யம்மாள், மாவட்ட பிரதிநிதி சத்யன், வட்டார வளர்ச்சி அலுவலகள் வடிவேல் முருகன், காமராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிகள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
The post ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் appeared first on Dinakaran.