×

தமிழக அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி: முதல்வருக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:  இந்தியா முழுவதும் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசில் பணியாற்றும் மாற்று திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு அலுவலகம் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர்களுக்கு அனைத்து அதிகாரிகளில் இருந்து பணியாளர்கள் வரை கட்டுப்பாடு நீங்கும் வரை அலுவலகம் வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. துணைச் செயலாளருக்கு கீழ் பதவிகளை வகிக்கும் மொத்தம் உள்ள ஒன்றிய அரசு பணியாளர்களில் 50 சதவீத பணியாளர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றலாம் என்றும் ஒன்றிய பணியாளர் நலத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரு நாளைக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தினால் அரசு ஊழியர்களை கொரோனா தொற்று பாதிப்பது கணிசமாக தடுக்கப்படும். எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஒன்றிய அரசு வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகைள தமிழக அரசு ஊழியர்களுக்கும் நீட்டிக்க வழிவகை செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post தமிழக அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி: முதல்வருக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,O.M. ,Pannerselvam ,Chennai ,Panneerselvam ,India ,Bannerselvam ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேரடி நெல்...