- ரமேஷ்
- எஸ்.எம்.நகர் காவல் நிலையம்
- Thirumullaivayal
- கொரட்டூர் காவல் நிலையம்
- கொரட்டூர் நீர் கால்வாய் சாலை…
அம்பத்தூர்: திருமுல்லைவாயல் அடுத்த எஸ்.எம். நகர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). கொரட்டூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கொரட்டூர் வாட்டர் கெனால் சாலையில் நின்று கொண்டிருந்த காரை பார்த்தார்.
அதில் 2 பெண்கள், ஒரு ஆண் இருப்பது தெரியவந்தது. மதுபோதையில் இருந்த அவர்களை அங்கிருந்து புறப்படுமாறு ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காரில் இருந்த ஒரு பெண், ரமேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் கொரட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post குடிபோதையில் காவலரை தாக்கிய பெண் appeared first on Dinakaran.