×

நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: வேளாண் இணை இயக்குநர் தகவல்

திருவள்ளூர்: நெல் உற்பத்தி திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் இணை இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் த.கலாதேவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து, மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கான போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் வெற்றி பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் சிறப்பு பரிசு மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும். இப்பயிர் விளைச்சல் போட்டியில் போட்டியிடும் விவசாயிகள் சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ குறைந்த பட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்வோராக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட சன்ன நெல் ரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும்.

மேலும் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்திருக்க வேண்டும். எனவே பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார வேளாண் உதவி இயக்குநரை அணுகி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பதிவு கட்ட ணமாக ரூ.150 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். வேளாண்மை இயக்குநர் தலைமையிலான மாநில அளவிலான குழு, விருதுக்கு உரியவர்களைத் தேர்வு செய்யும். நடப்பு சம்பா பருவத்தில் உள்ள விவசாயிகள் இப்போட்டியில் பங்கேற்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

The post நெல் உற்பத்தி திறனுக்கான விருதுக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்: வேளாண் இணை இயக்குநர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Agriculture ,Thiruvallur District ,Joint Director of Agriculture ,T. Kaladevi ,Joint ,
× RELATED பெஞ்சல் புயல் மழையால்...