×

ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் மாற்றமின்றி முடிந்தது..!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் மாற்றமின்றி முடிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய போது 425.5 புள்ளிகள் உயர்ந்திருந்தது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே இறங்கிய சென்செக்ஸ் 294 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 78,173 புள்ளிகளாக சரிந்தது. எனினும் பின்னர் மீட்சி பெற்ற சென்செக்ஸ் வர்த்தகம் முடிந்தபோது ஏற்ற இறக்கமின்றி 78,472 புள்ளிகளில் நிறைவடைந்தது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 13 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23 புள்ளிகள் உயர்ந்து 23,750 புள்ளிகளானது. அதானி போர்ட்ஸ் பங்கு 5%, எம் அண்டு எம், மாருதி சுசூகி பங்குகள் தலா 1.5%, சன்பார்மா பங்கு 1% விலை உயர்ந்தன. பார்த்தி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், கோட்டக் வங்கி உள்ளிட்ட பங்குகள் விலை உயர்ந்தது. டைட்டன், ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, ரிலையன்ஸ், ஸொமாடோ உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின.

The post ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் மாற்றமின்றி முடிந்தது..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Sensex ,Dinakaran ,
× RELATED மாற்றமின்றி முடிந்தது சென்செக்ஸ்