சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்த்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7,150-க்கும் சவரன் ரூ.57,200-க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரும்பாலும் குறைந்தே விற்பனையானது. வார தொடக்கத்தில் ரூ.57,120-க்கு விற்பனையான சவரன் விலை வார இறுதியில் ரூ.56,800-க்கு விற்பனையானது. பெரிய அளவில் விலை உயர்வு இல்லாததால் தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் சவரனுக்கு ரூ.56,800-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து சவரன் ரூ.56,720-க்கும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200 ஆயிரத்துக்கும் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,150-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.57,200-க்கு விற்பனை appeared first on Dinakaran.